கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா பெற்றுள்ள நேரடி அந்நிய முதலீடு எவ்வளவு என்ற விவரத்தை அரசு அறிவித்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் சோம் பிரகாஷ் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் மூலம் இது தெரியவந்துள்ளது.
2014-15இல் 45.15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அந்நிய முதலீடு 2020-21இல் 81.97 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா பெற்ற அந்நிய முதலீடு குறித்த விவரமும் ஆண்டு வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
2016-17இல் 60.22 பில்லியன் அமெரிக்க டாலர்கள், 2017-18இல் 60.97 பில்லியன் அமெரிக்க டாலர்கள், 2018-19இல் 62.00 பில்லியன் அமெரிக்க டாலர்கள், 2019-20இல் 74.39 பில்லியன் அமெரிக்க டாலர்கள், 2020-21 இல் 81.97 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளையும் சேர்த்து மொத்தமாக பெற்றுள்ள முதலீடு 339.55 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இதற்கு காரணம் அரசின் எளிய கொள்கை முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: PIB