நாடெங்கும் சமையல் எண்ணெய் வகைகளின் விலை கடந்த ஓராண்டாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான இறக்குமதி வரியை 17.5% சதவிகிதத்தில் இருந்து 12.5% ஆக குறைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வரிக்குறைப்பு அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என மத்திய மறைமுக வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பல்வேறு வகை சமையல் எண்ணெய்களுக்கான வரி ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது.