ஆறு மாதங்களில் 2-வது முறையாக சம்பள உயர்வை அறிவித்த டிசிஎஸ்!

ஆறு மாதங்களில் 2-வது முறையாக சம்பள உயர்வை அறிவித்த டிசிஎஸ்!
ஆறு மாதங்களில் 2-வது முறையாக சம்பள உயர்வை அறிவித்த டிசிஎஸ்!
Published on

இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி நிறுவனமான டிசிஎஸ் (டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்) ஆறு மாதங்களில் இரண்டாவது சம்பள உயர்வை அறிவித்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் சம்பள உயர்வை அறிவித்தது. அதனைத்தொடர்ந்து தற்போது புதிய சம்பள உயர்வை அறிவித்திருக்கிறது. இந்த சம்பள உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டிசிஎஸ் நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளில் மற்றும் நாடுகளில் பணியாற்றுபவர்களுக்கும் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொடுக்க வேண்டிய சம்பள உயர்வு, கோவிட் காரணமாக கொடுக்க முடியவில்லை. அதனால் அந்த சம்பள உயர்வு கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. அப்போது 6 முதல் 8 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. தற்போது நிச்சயமற்ற சூழல் குறைந்திருப்பதால் வழக்கமான காலத்தில் இந்த ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புதிய சம்பள உயர்வு சராசரியாக 12% முதல் 14 சதவீதம் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர, ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப பதவி உயர்வுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என டிசிஎஸ் தெரிவித்திருக்கிறது.

இந்த நிறுவனத்தில் 4.7 லட்சம் பணியாளர்கள் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

இதற்கிடையே, மற்றொரு ஐடி நிறுவனமான அசென்சர் (Accenture) ஒரு வார அடிப்படை சம்பளத்தை போனஸாக அறிவித்திருக்கிறது. கடினமான காலகத்தில் உழைத்தற்காக இந்தப் பரிசு என நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் 2 லட்சம் பணியாளர்கள் பயன் அடைவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த நிதி ஆண்டுக்கான சம்பள உயர்வை டிசிஎஸ் தொடங்கி வைத்திருப்பதால், மற்ற நிறுவனங்களும் ஊதிய உயர்வை அறிவிக்கும் என எதிர்ப்பார்ப்பு தொடங்கி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com