வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின்றன.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று முற்பகல் 11 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 462 புள்ளிகள் சரிந்து 56 ஆயிரத்து 899 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 126 புள்ளிகள் இறங்கி 17 ஆயிரத்து 26 புள்ளிகளில் வணிகமானது.
உக்ரைன் - ரஷ்யா போர், அமெரிக்க மைய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியிருப்பது, சீனாவில் புதிதாக உருவாகியுள்ள கொரோனாவால் பொதுமுடக்கம் அறிவித்திருப்பது, இதுபோன்ற காரணங்களால் விநியோக சங்கிலி தடைபட்டு பணவீக்கம் உயர்ந்திருப்பது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாவதாகக் கூறப்படுகிறது.
பங்குச் சந்தைகள் சரிவுடன் காணப்பட்டபோதிலும், ஐநாக்ஸ் மற்றும் பிவிஆர் இணைப்பு அறிவிப்பு காரணமாக, அந்நிறுவனங்களின் பங்குகள் ஓராண்டில் இல்லாத விலை உயர்வுடன் வர்த்தகமாகின்றன.