பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்ததில் முதலீட்டாளர்கள் ஒரு நாளில் மட்டும் 4.47 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்புகளை சந்தித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 866.65 புள்ளிகள் வீழ்ச்சிகண்டு 54 ஆயிரத்து 835.58 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. சர்வதேச சந்தைகளில் வீழ்ச்சி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றது, அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை போன்றவை இந்த இழப்புகளுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்செர்வ், நெஸ்லே, விப்ரோ, ஹெச்டிஎஃப்டி, இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக வீழ்ச்சி கண்டன. டெக் மஹிந்திரா, பவர்கிரிட், ஐடிசி, எஸ்பிஐ, என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்தன.