எங்களுக்கு வேறு வழி தெரியல! - வாடிக்கையாளர்கள் தலையில் சுமையை வைக்கும் ஸ்பைஸ் ஜெட்

எங்களுக்கு வேறு வழி தெரியல! - வாடிக்கையாளர்கள் தலையில் சுமையை வைக்கும் ஸ்பைஸ் ஜெட்

எங்களுக்கு வேறு வழி தெரியல! - வாடிக்கையாளர்கள் தலையில் சுமையை வைக்கும் ஸ்பைஸ் ஜெட்
Published on

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் கட்டணம் சுமார் 15 சதவீதம் அளவுக்கு உயர இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விமான எரிபொருள் உயர்வு மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக இந்த ஏற்றம் தவிர்க்க முடியாதது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது

2021-ம் ஆண்டு ஜூன் முதல் தற்போது வரை விமான எரிபொருள் கட்டணம் 120 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. விமான நிறுவனங்களில் எரிபொருள் முக்கியமான செலவு. மொத்த செலவில் 50 சதவீதம் அளவுக்கு எரிபொருளுக்கு செலவாகிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ லிட்டர் 16 சதவீதம் அளவுக்கு உயர்ந்து ரூ.1.41 லட்ச ரூபாயாக (ஒரு லிட்டர் ரூ.141) விமான எரிபொருள் இருந்தது. இது புதுடெல்லி விலை. ஒவ்வொரு மாநிலங்களும் வரி மாறுபடுவதால் விலையிலும் மாற்றம் இருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் 146 ரூபாய் என்னும் அளவில் இருக்கிறது.

இந்த நிலையில் விமான எரிபொருள் வரியை குறைக்க வேண்டும் என ஸ்பைஸ்ட்ஜெட் தலைமைச் செயல் அதிகாரி அஜய் சிங் கோரிக்கை விடுத்திருக்கிறார். இத்தனை மாதங்களில் நாங்கள் சமாளித்துவந்தோம். ஆனால் இனி கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை. தவிர சர்வதேச அளவில் விமான எரிபொருளுக்கு அதிக வரி இந்தியாவில்தான் விதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com