நடப்பு 2021 - 2022 ஆம் நிதியாண்டுக்கான 6 ஆவது கட்ட தங்கப் பத்திர விற்பனை நாளை தொடங்க உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறும் தங்கப் பத்திர விற்பனையின்போது கிராம் ஒன்று 4 ஆயிரத்து 732 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்கப் பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கி 4,682 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
மத்திய அரசு சார்பில் ரிசர்வ் வங்கி வெளியிடும் இந்த தங்கப்பத்திரங்களை தனிநபர் ஒருவர் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4 கிலோ வரை வாங்க முடியும். வங்கிகள், அஞ்சலகங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் மூலமாக தங்கப்பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.