ஊரடங்கால் டெலிவெரியாக முடியாத ஆன்லைன் ஆர்டர்கள் - பரிதாப நிலையில் ஸ்மார்ட்போன் விற்பனை

ஊரடங்கால் டெலிவெரியாக முடியாத ஆன்லைன் ஆர்டர்கள் - பரிதாப நிலையில் ஸ்மார்ட்போன் விற்பனை
ஊரடங்கால் டெலிவெரியாக முடியாத ஆன்லைன் ஆர்டர்கள் - பரிதாப நிலையில் ஸ்மார்ட்போன் விற்பனை
Published on

கொரோனா வைரஸ் எதிரொலியால் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நடவடிக்கை காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால், அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மட்டும் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் எதிரொலியாக பல்வேறு நிறுவனங்களின் லாபம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் எதிரொலி இந்திய பங்கு சந்தைகளிலும் கடுமையாக எதிரொலித்ததால் வரலாறு காணாத வீழ்ச்சியை பங்கு சந்தைகள் கண்டுள்ளன.

அந்த வகையில் தற்போது செல்போன் மற்றும் டிவி உள்ளிட்ட டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விற்பனையும் கடும் சரிவை சந்தித்துள்ளன. ஊரடங்கு உத்தரவால் தங்களுக்கு வந்த ஆர்டர்களை டெலிவரி செய்ய முடியாத நிலையில், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் இல்லாத பொருட்களே ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசானில் 70%க்கும் அதிகமாக விற்பனையாகும். தற்போது இவை அனைத்தும் முடங்கியுள்ளன.

அத்துடன் இந்த விற்பனை வீழ்ச்சியின் எதிரொலியாக விவோ, ஓப்போ, ஒன் ப்ளஸ், ரியல் மற்றும் ஜியோமி உள்ளிட்ட நிறுவனங்களின் காலாண்டு வருமானத்தை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதம் இந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் விற்பனை 30% சரிந்துள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரிக்கலாம் எனப்படுகிறது. அதேசமயம் விவோ நிறுவனத்திற்கு மட்டும் ஐபிஎல் போட்டிகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டால் ரூ.440 செலவு மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com