ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவை கட்டணத்தை 75% வரை குறைத்த எஸ்பிஐ

ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவை கட்டணத்தை 75% வரை குறைத்த எஸ்பிஐ
ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவை கட்டணத்தை 75% வரை குறைத்த எஸ்பிஐ
Published on

டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைன் பரிமாற்றத்துக்கான சேவைக் கட்டணங்களை 75 சதவீதம் வரை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) குறைத்துள்ளது. 

இதுதொடர்பாக எஸ்பிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், என்ஈஎஃப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) ஆகிய இணையவழி பணபரிமாற்றங்களுக்கான புதிய கட்டண விகிதங்களை அறிவித்துள்ளது. என்ஈஎஃப்டி பணபரிமாற்றங்களைப் பொறுத்தவரை, ரூ.10,000 வரையிலான பரிமாற்றங்களுக்கான கட்டணம் ரூ.2 லிருந்து ஒரு ரூபாயாகவும், ரூ.10,001 முதல் ஒரு லட்ச ரூபாய் வரையிலான பரிமாற்றங்களுக்கான கட்டணம் ரூ.4லிருந்து, ரூ.2ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 
அதேபோல, ஒரு லட்ச ரூபாயிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் வரையிலான பணபரிமாற்றங்களுக்கான சேவைக் கட்டணம் ரூ.12லிருந்து, ரூ.3ஆகவும், ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரையிலான பணபரிமாற்றங்களுக்கான சேவை கட்டணம் ரூ.20லிருந்து, ரூ. 5ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.  

ஆர்டிஜிஎஸ் பணபரிமாற்றங்களைப் பொறுத்தவரை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரையிலான பணபரிமாற்றங்களுக்கான கட்டணத்தை ரூ.20லிருந்து ரூ.5ஆகவும், ரூ.5லட்சத்துக்கு மேற்பட்ட பணபரிமாற்றங்களுக்கான சேவை கட்டணத்தை ரூ.40லிருந்து ரூ.10ஆகவும் குறைத்து எஸ்பிஐ அறிவித்துள்ளது. இந்த புதிய சேவைக் கட்டண விகிதம் ஜூலை 15ம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஆயிரம் ரூபாய் வரையிலான பணபரிமாற்றங்களுக்கான கட்டணத்தை எஸ்பிஐ முற்றிலுமாக ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com