இந்தியப் பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக கடும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
வர்த்தகத் தொடக்கத்தில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 626 புள்ளிகள் சரிந்து 59,358 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 180 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 17,676 புள்ளிகளில் வணிகமாகியது.
இன்றைய வர்த்தகத்தில், இண்டஸ் இண்ட் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, கோட்டக் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்வதே பங்குச் சந்தைகள் குறைய காரணமாகக் கூறப்படுகிறது.