இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கடும் சரிவுடன் வர்த்தகமாகின்றன.
காலை 10 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 873 புள்ளிகள் சரிந்து 55,373 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 218 புள்ளிகள் இறங்கி 16,575 புள்ளிகளில் வணிகமாகியது. இன்றைய வர்த்தகத்தில் உலோகத்துறையை தவிர்த்து வங்கி, ஆட்டோ உள்ளிட்ட துறை பங்குகள் விலை வீழ்ச்சியடைந்துள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவது தொடர்வதால் சர்வதேச அளவில் பதற்றம் நிலவுவதன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாவதாக கூறப்படுகிறது.