புதிய சாதனை உச்சத்தை எட்டிய இந்திய பங்குச் சந்தைகள் வர்த்தகம்.. தொடருமா இந்த ஏற்றம்?

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய சாதனை உச்சத்தை எட்டியது.
India share market
India share marketReuters
Published on

கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தையில் தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டு வருகிறது. ஜூலை 19 ஆன இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் புதிய வெளிநாட்டு நிதி வரத்து மற்றும் வங்கி கவுன்டர்களில் வாங்குதல் ஆகியவற்றிற்கு இடையே நடந்த ஆரம்ப வர்த்தகம், புதிய சாதனை உச்சத்தை எட்டியது. அமெரிக்க சந்தைகளில் நிலவிய போக்கு, நமக்கு உள்நாட்டு அளவுகோல் குறியீடுகள் உயர பங்களித்தது என சொல்லப்படுகிறது.

இதில் இன்றைய தினம், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 302.30 புள்ளிகள் உயர்ந்து 67,097.44 என உச்சத்தை எட்டியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 83.90 புள்ளிகள் உயர்ந்து 19,829.55 என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது.

சென்செக்ஸ் பேக்கில் இருந்து, NTPC, IndusInd Bank, Infosys, Power Grid, Tech Mahindra, Wipro, Reliance Industries மற்றும் HDFC Bank ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

மாருதி, மஹிந்திரா & மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பார்தி ஏர்டெல் மற்றும் நெஸ்லே ஆகியவை பின்தங்கியுள்ளன.

ஆசிய சந்தைகளில், டோக்கியோ பச்சை நிறத்தில் மேற்கோள் காட்டப்பட்டது, அதே நேரத்தில் சியோல் மற்றும் ஷாங்காய் குறைவாக வர்த்தகம் செய்தன. முன்னதாக அமெரிக்கச் சந்தைகள் நேற்று முன்தினம் பாசிட்டிவாக முடிவடைந்திருந்தன.

New York Stock Exchange
New York Stock Exchange

IndusInd வங்கி நிறுவனம் செவ்வாயன்று (நேற்று) ஏப்ரல் - ஜூன் மாதத்திற்கான ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 30% உயர்ந்து ₹2,124.50 கோடியாக அறிவித்தது. அதையடுத்து, கிட்டத்தட்ட 2% அதிகமாக மேற்கோள் காட்டியது. 2,115.84 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியதால், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாயன்று தங்கள் வாங்கும் நடவடிக்கையைத் தொடர்ந்தனர் என்று பரிமாற்ற தரவுகளின்படி கூறப்படுகிறது.

உலகளாவிய எண்ணெய் அளவுகோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 0.21% குறைந்து $79.46 என இருக்கின்றது.

ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) புதன்கிழமை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை நடப்பு நிதியாண்டில் 6.4% ஆகவும், அடுத்த நிதியாண்டில் 6.7% ஆகவும் தக்க வைத்துக் கொண்டது.

செவ்வாய்க்கிழமை பிஎஸ்இ அளவுக்கோல் 205.21 புள்ளிகள் அல்லது 0.31% உயர்ந்து அதன் புதிய அனைத்து நேர உயர்வான 66,795.14 இல் நிலைபெற்றது. நிஃப்டி 37.80 புள்ளிகள் அல்லது 0.19% உயர்ந்து அதன் அனைத்து நேர உயர்வான 19,749.25 இல் முடிந்தது என்று கூறப்படுகிறது.

- ஜோஷ்வா.கா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com