இன்றைய பங்கு சந்தைகள் முடிவுகளில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வர்த்தக குறியீடுகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.
3வது வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. இன்றைய தினத்தின் முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 83.88 புள்ளிகள் உயர்ந்து 37,481.1 புள்ளிகளுடன் நிறைவடைந்தன. சதவிகிதத்தின் அடிப்படையில் இது 0.22% உயர்வாகும். இதேபோன்று தேசிய பங்கு சந்தை மதிப்பீடான நிஃப்டி 32.60 புள்ளிகள் உயர்ந்து 11,118 புள்ளிகளில் நிலை கொண்டன. இது 0.29% உயர்வு ஆகும்.
இன்றைய தினத்தின் மும்பை பங்கு சந்தை மதிப்பீட்டில் அதிகபட்சமாக யெஸ் வங்கியின் புள்ளிகள் 6.04 சதவிகதம் அதிகரித்தன. அத்துடன் இண்டஸ்லண்ட் வங்கி, டாடா ஸ்டீல், ஹீரோமோடோகார்ப், சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, பவர் க்ரிட், டாடா மோட்டார்ஸ், எஸ்.பி.ஐ, கோடாக் வங்கி ஆகியவை 5.32% உயர்வடைந்தன. அதேசமயம் அக்ஸிஸ் வங்கி அதிகபட்சமாக 4.55% வீழ்ச்சி அடைந்தது. அதைத்தொடர்ந்து பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ், மாருதி, டெக் மகேந்திரா, ஓ.என்.ஜி.சி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவை சரிவடைந்தன.