வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன.
இன்றைய வர்த்தக நாளில் மும்பை பங்கு சந்தை மதிப்பீடான சென்செக்ஸ் 337.35 புள்ளிகள் அல்லது 0.92% உயர்வடைந்தது 36.981.77 புள்ளிகளுடன் முடிவடைந்தது. அதேசமயம் தேசிய பங்கு சந்தை மதிப்பீட்டூ குறியீடான நிஃப்டி 98.30 புள்ளிகள் அல்லது 0.91% அதிகரித்து 10,946.20 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் மதிப்பீட்டில் இன்று அதிகபட்சமாக டெக் மகேந்திரா, மாருதி, என்.டி.பி.சி, ஆக்ஸிஸ் வங்கி, டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம், கொடாக் வங்கி ஆகியவை 3.77% வளர்ச்சி அடைந்தன. மற்றொருபுறம் எஸ் வங்கி, சன் பார்மா, டி.சி.எஸ், ஹெச்.சி.எல் டெக், ஹெச்.யு.எல் மற்றும் ஐ.டி.சி உள்ளிட்ட நிறுவனங்கள் 2.42% வீழ்ச்சியை சந்தித்தன. இன்றைய பங்கு சந்தை முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 16 பைசா உயர்ந்தது.