மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 50,000 புள்ளிகளை தாண்டி வர்த்தகமாகியது.
மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று சென்செக்ஸ் உயர்ந்து காணப்படுகிறது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் சுமார் 1,410 புள்ளிகள் உயர்ந்து 50,011 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் கடந்த 2 நாட்களில் சுமார் 3,500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 50,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. அதேபோல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 402 புள்ளிகள் அதிகரித்து 14,683 புள்ளிகளில் வணிகமாகியது.
முன்னதாக வங்கிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் மூலதன நிதி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவே பங்குச் சந்தைகள் உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதேபோல கட்டமைப்பு, உற்பத்தி, சுகாதாரத் துறைகளுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடும் பங்குச் சந்தைகள் உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.