சென்செக்ஸ் 3000 புள்ளிகள் சரிவு : ஊசலாடும் இந்திய பங்கு சந்தைகள்

சென்செக்ஸ் 3000 புள்ளிகள் சரிவு : ஊசலாடும் இந்திய பங்கு சந்தைகள்
சென்செக்ஸ் 3000 புள்ளிகள் சரிவு : ஊசலாடும் இந்திய பங்கு சந்தைகள்
Published on

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடும் சரிவை சந்தித்திருப்பதால் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று காலை முதலே இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் காணப்பட்டன. கொரோனா வைரஸ் பாதிப்பு, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, யெஸ் வங்கி சிக்கல் ஆகிய பிரச்னைகளால் சரிந்த இந்திய பங்கு சந்தைகள் இன்று மீளவில்லை.

இந்நிலையில் இன்று வர்த்தகத்தில் மும்பை பங்கு சந்தை மதிப்பீட்டு குறியீடான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்கு சந்தை மதிப்பீடான நிஃப்டி ஆகியவை கடும் சரிவை சந்தித்துள்ளன. இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 3,204.3 புள்ளிகள் சரிந்து 32,493.10 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. நிஃப்டி 950.4 புள்ளிகள் சரிந்து 9,508.00 புள்ளிகள் என்ற பரிதாப நிலையை அடைந்தது. பங்கு சந்தையின் தொடர் சரிவால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.11.42 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 2,919 புள்ளிகள் குறைந்து 32,778 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 868 புள்ளிகள் குறைந்து 9,590 புள்ளிகளுடன் முடிவடைந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு ஆகும்.

சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டமே இந்த சரிவிற்கு முக்கிய காரணம் என கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சர்வதேச பொருளாதார மந்தநிலை கூடுதல் காரணம். இந்தியா மட்டுமின்றி ஜப்பான் உள்ளிட்ட மேலும் சில ஆசிய நாடுகளும் பங்கு சந்தைகளில் சரிவை சந்தித்திருக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com