இந்திய பங்குசந்தைகள் மதிப்பீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று மும்பை பங்கு சந்தை மதிப்பீட்டு குறியீடான சென்செக்ஸ் 396 புள்ளிகள் அல்லது 1.03%
உயர்ந்து 38,989.74 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் மதிப்பீட்டில் வேதாந்தா நிறுவனம் அதிகபட்சமாக 7% வளர்ச்சியும், எஸ்
வங்கி அதிகபட்சமாக 5% சரிவையும் சந்தித்தன.
தேசிய பங்கு சந்தை மதிப்பீடான நிஃப்டி 133 புள்ளிகள் அல்லது 1.22% அதிகரித்து 11,573.30 புள்ளிகளுடன் முடிவடைந்தது. கடந்த சில
நாட்களுக்கு முன்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைத்தார். அதன்பின்னர்
தொடர்ந்து இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. இதற்கிடையே நேற்று சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.