பாரத ஸ்டேட் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டியை அரை சதவிகிதம் குறைத்துள்ளது.
ஒரு கோடி ரூபாய்க்கு கீழான சேமிப்புத் தொகைக்கான வட்டி 4 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. எனினும் ஒரு கோடி ரூபாய்க்குமு மேலான சேமிப்புத் தொகைகளுக்கு வட்டி 4 சதவிகிதமாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மின்னணு பரிமாற்றத்தில் 1000 ரூபாய் வரையிலான பணப் பரிமாற்றத்துக்கு கட்டணமில்லை என்று தெரிவித்துள்ளது.