நாளை வெளியாகும் சாம்சங் ‘கேலக்ஸி எஸ்20 எஃப்இ’ - சிறப்பம்சங்கள் ?

நாளை வெளியாகும் சாம்சங் ‘கேலக்ஸி எஸ்20 எஃப்இ’ - சிறப்பம்சங்கள் ?
நாளை வெளியாகும் சாம்சங் ‘கேலக்ஸி எஸ்20 எஃப்இ’ - சிறப்பம்சங்கள் ?
Published on

சாம்சங் நிறுவனத்தின் ‘கேலக்ஸி எஸ்20 எஃப்இ’ ஸ்மார்ட்போன் நாளை இந்தியாவில் வெளியாகவுள்ளது.

சாம்சங் நிறுவனம் தங்கள் புதிய உற்பத்தியான ‘கேலக்ஸி எஸ்20’ ரக ஸ்மார்ட்போனை உலகம் முழுவதும் வெளியிடுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பல ரகங்கள் வெளியாகும் நிலையில், இந்தியாவில் ‘கேலக்ஸி எஸ்20 எஃப்இ’ என்ற ரகம் வெளியிடப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இளஞ்சிவப்பு, இளநீலம், இளம்பச்சை, அடர் நீலம் மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.

4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டு நெட்வொர்க்குடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் நிலையில், இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் ஆப்ஷன் மட்டுமே வெளிவருகிறது. சர்வதேச சந்தையில் 5ஜி மாடலின் விலை ரூ.51,200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் வெளியாகும் ‘கேலக்ஸி எஸ்20 எஃப்இ’ மாடலின் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

சிறப்பம்சங்கள் :

டிஸ்ப்ளே : 6.5 இன்ச் ஃபுள் ஹெச்டி (கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டது)

இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10

பிராசெஸர் : அக்டோ-கோர் எக்ஸினாஸ் 990 எஸ்ஓசி

ரேம் : 8 ஜிபி

ஸ்டோரேஜ் : 128 ஜிபி

கேமரா : 12 எம்பி + 12 எம்பி + 8 எம்பி

செல்ஃபி கேமரா : 32 எம்பி

நெட்வோர்க் : 4ஜி

பேட்டரி : 4500 எம்ஏஹெச்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com