சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ31 மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பொது முடக்கத்திற்குப் பின்னர் செல்போன்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. அதிலும் ஸ்மார்ட்போன்களுக்கு மவுசு கூடியுள்ளது. இதனால் அனைத்து நிறுவனங்களும் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ‘கேலக்ஸி ஏ31’ மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்டது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் இதில் உள்ளது. அத்துடன் கூடுதலாக 512 ஜிபி வரை மைக்ரோ கார்டு பொருத்தி மெமரியை அதிகரித்துக்கொள்ள முடியும். இதன் பின்புறத்தில் 48 எம்பி மெயின் கேமராவுடன், 8 எம்பி துணைக்கேமரா வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 5 எம்பி கொண்ட இரண்டு சென்சார் லென்சுகள் உள்ளன.
இதுதவிர 20 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. சென்சார் பயோமெட்ரிக் ஃபிங்கர் பிரிண்ட் வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 15 வாட் வேகத்தில் ஜார்ஜ் செய்யக்கூடிய 5000 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரி இருக்கிறது. கறுப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.21,999 ஆகும்.