சாம்சங் நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட் போனான ஏ21 மாடலை வெளியிட்டுள்ளது.
கொரோனா பொது முடக்க விற்பனைக்குப் பின்னர் அனைத்து செல்போன் நிறுவனங்களும் புதிய ஸ்மார்ட் போன்களை வெளியிடத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ21 என்ற புதிய ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. இந்த போன் நீளம், கறுப்பு, வெள்ளை மற்றும் சிகப்பு ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.
இது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் என இரண்டு ரகங்களில் வெளியாகியுள்ளது. அத்துடன் கூடுதலாக 512 ஜிபி வரை இதில் மைக்ரோ கார்டு பொருத்திக்கொள்ள முடியும். இதன் பின்புறத்தில் 48 எம்பி (மெகா பிக்ஸல்) மெயின் கேமரா, அத்துடன் 8 எம்பி, 2 எம்பி மற்றும் 2 எம்பி என மொத்தம் 4 கேமராக்கள் உள்ளன. முன்புறத்தில் 13 எம்பி செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
6.5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபிங்கர் பிரிண்ட் சென்ஸார் மற்றும் முகத்தை ஸ்கேன் செய்யும் அன்லாக் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 15 வாட் வேகத்தில் சார்ஜ் செய்யக்கூடிய 5,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது.