ஒரு கிராமுக்கு ரூ.4,807 - அரசு தங்கப் பத்திர விற்பனை தொடக்கம்

ஒரு கிராமுக்கு ரூ.4,807 - அரசு தங்கப் பத்திர விற்பனை தொடக்கம்
ஒரு கிராமுக்கு ரூ.4,807 - அரசு தங்கப் பத்திர விற்பனை தொடக்கம்
Published on

2021 மே 12 தேதியிட்ட இந்திய அரசின் அறிவிப்பு எண் 4(5)-B (டபுள்யூ & எம்) / 2021-ன் படி, 2021 ஜூலை 20-ஐ செட்டில்மெண்ட் தேதியாக கொண்ட அரசு தங்க பத்திரங்கள் 2021-22 (வரிசை IV) 2021 ஜூலை 12 முதல் 16 வரை திறந்திருக்கும்.

சந்தா காலத்திற்கான பத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ.4,807 ஆக இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் 2021 ஜூலை 9 தேதியிட்ட செய்திக் குறிப்பிலும் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியுடனான ஆலோசனைக்குப் பிறகு, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கட்டணத்தையும் டிஜிட்டல் முறையில் செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.

அத்தகைய முதலீட்டாளர்களுக்கு தங்கத்தின் வெளியீட்டு விலை, ஒரு கிராமுக்கு ரூ.4,757 ஆக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com