கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!

கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
கார் வாங்க போறிங்களா  - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
Published on

குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் ஒன்றாக சேர்ந்து பேருந்தில் பயணம் செய்தால், ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. சரி, அடித்து பிடித்து கார் வாங்க சென்றால், விலை உயர்ந்த கார்களில் கிடைக்கும் பாதுகாப்பு வசதிகள் விலை குறைந்த கார்களில் கிடைப்பதில்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆகையால் அவர்களுக்கென்று 10 லட்சத்திற்குள் 6 பாதுகாப்பான கார்களை வரிசைப்படுத்துகிறது இந்தக் கட்டுரை.

மகேந்திரா XUV300 - விலை 9.30 லட்சம்

உலக அளவில் வாகனங்களை சோதனை செய்து, பாதுகாப்புத் தரத்திற்கு ஏற்ப ஸ்டார்களை வழங்கும் GNCAP (International charity and network of global crash test) இந்திய சாலைகளில் பயணிக்க மகேந்திரா XUV300 கார் பாதுகாப்பானது என பரிந்துரை செய்துள்ளது. இளைஞர்கள் பயணிக்கும் போது மகேந்திரா XUV300 காரின் பாதுகாப்பின் தரம் 4 ஸ்டாராகவும், குழந்தைகள் பயணிக்கும் போது 5 ஸ்டாராகவும் உள்ளது. இந்த காரின் விலை மும்பை நிலவரப்படி 9.30 லட்சமாக உள்ளது. மகேந்திரா XUV300 காரில் இரண்டு ஏர் பேக்குகள், பாதுகாப்பு குறியீடுகளை நினைவு படுத்தும் சிக்னல்கள் மற்றும் லாக்ஸ், க்ராஷ் சென்சார், ஸ்பீடு சென்சிங் லாக்ஸ் உள்ளிட்ட பல வசதிகள் இடம் பெற்றுள்ளன. இது மட்டுமன்றி, கார்னர் ப்ரேக்கிங் கன்ரோல், பானிக் ப்ரேக்கிங் சிக்னல் உள்ளிட்டவை மைக்ரோ ஹைப்ரடு டெக்னாலஜியுடன் வழங்கப்பட்டுள்ளன.

டாடா தியாகோ (Tata Tiago) - விலை 5.62 லட்சம்

5.62 லட்சத்திற்கு கிடைக்கும் டாடா தியாகோ காரும் பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்குவதில் சளைத்தது இல்லை. குறைந்த விலையில் கிடைக்கும் இந்தக் காரின் பாதுகாப்பு தரம் இளைஞர்களுக்கு 4 ஸ்டார்களாகவும், குழந்தைகளுக்கு 3 ஸ்டார்களாகவும் உள்ளன. இந்தக் காரை மானுவலாகவும், ஆட்டோமெட்டிக்காவும் பயன்படுத்த முடியும்.

டாட்டா நெக்ஸான் (Tata Nexon)

மக்கள் மத்தியில் பிரபலமான ‘டாட்டா நெக்ஸான்’ காரின் பாதுகாப்பு தரத்திற்கு GNCAP 5 ஸ்டார்களை வழங்கியுள்ளது. 8.22 லட்சத்திற்கு விற்கப்படும் இந்த காரில் ஆன்டி ப்ரேக்கிங் சிஸ்டம், பவர் டோர் லாக்ஸ், குழந்தைகள் பாதுகாப்புக்கென்று பிரேத்யக லாக்ஸ், டுவல் ஏர் பேக்ஸ் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. இதன் சிறப்பு வசதி எலக்ரானிக் ப்ரேக்கிங் சிஸ்டம். அத்துடன் பயணிகளின் பாதுகாப்பிற்காக சீட் பெல்ட் வார்னிங், எலக்ரானிக் இம் மொபிலைசர், க்ராக் சென்சார் உள்ளிட்ட பல வசதிகள் இடம் பெற்றுள்ளன.

Tata Tigor (டாடா டைகோர்)

டாடா டைகோர் கார் மார்க்கெட்டில் 6.37 லட்சத்திற்கு கிடைக்கிறது. GNCAP வழங்கியுள்ள பாதுகாப்பு தரத்தில், இளைஞர்களுக்கு 4 ஸ்டார் அளவிலான பாதுகாப்பையும், குழந்தைகளுக்கு 3 ஸ்டார் அளவிலான பாதுகாப்பையும் வழங்குகிறது. பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கும் இந்த கார் 6 நிறங்களில் கிடைக்கிறது. இந்தக் காரில் மானுவல், ஆட்டோ மெட்டிக் ஆகிய இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன.

Tata Altroz (டாடா அல்ட்ரோஸ்)



டாடா அல்ட்ரோஸின் கார் 6.43 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. 11 நிறங்களில் கிடைக்கும் இந்த கார் டீஸல், பெட்ரோல் ஆகிய இரு இன்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. மானுவலாகவே மட்டுமே இந்த காரை இயக்க முடியும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா (Maruti Vitara Brezza)

8.18 லட்சத்தில் கிடைக்கும் இந்த காரின் பாதுகாப்பு தரத்திற்கு 4 ஸ்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆன்டி ப்ரேக்கிங் சிஸ்டம் வசதியுடன் எலக்ரானிக் ப்ரேக் ஃபோர்ஸ் டிஸ்ரிபியூஷன் சிஸ்டத்தையும் உள்ளடக்கிய இந்தக் காரில் ரிவியூ கண்ணாடி, ஆட்டோமெட்டிக் ஹெட் லேம்ப்ஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

- கல்யாணி பாண்டியன் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com