இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, 12 காசுகள் உயர்ந்து 82.96 ஆக முடிவடைந்தது. கச்சா எண்ணெய்யை பொறுத்த வரை ‘கச்சா எண்ணெய் விலையின் அதிகரிப்பு உள்ளூர் இறக்குமதியாளார்களின் லாபத்தைக் குறைக்கிறது என்றும் கச்சா எண்ணெய் விலை அதிகமாகும் போது அது பிற ஆதாயங்களைக் குறைக்கிறது என்றும் வர்த்தகர்கள் (அந்நிய செல்வாணி) தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணியில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு 82.05 ஆக தொடங்கியது. இந்த மதிப்பு முடிவடையும் போது 81.96 ஆக முடிவடைந்தது.
இண்ட்ரா டே வர்த்தகத்தில் உள்நாட்டு யூனிட், அதிகபட்சமாக 81.97 ஆகவும் குறைந்தபட்சமாக 82.05 ஆகவும் இருந்தது. ரூபாய் மற்றும் டாலர் சந்தைகளில் பங்கேற்பாளர்கள் அடுத்த வாரம் வரவிருக்கும் (ஃபெடரல் ரிசர்வ் ரேட்) முடிவுக்கான குறிப்புகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
உலகளாவிய எண்ணெய் அளவுகோலான ”ப்ரெண்ட் கச்சா” ஒரு பீப்பாய்க்கு 0.13 சதவீதம் உயர்ந்து 79.56 டாலராக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு பங்குச் சந்தையில், 30-பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 49.46 புள்ளிகள் குறைந்து 67,047.98 ஆக வர்த்தகமானது. என்எஸ்இ நிஃப்டி 13.45 புள்ளிகள் சரிந்து 19,819.70 ஆக உள்ளது.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) நேற்று மூலதனச் சந்தைகளில் நிகர பங்குகளை வாங்குபவர்களாக இருந்தனர். அவர்கள் 1,165.47 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கிறது.
- ஜோஷ்வா.கா