அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 22 காசுகள் சரிந்து 78 ரூபாய் 59 காசுகளானது. நேற்று வர்த்தக முடிவில், ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து 78 ரூபாய் 37 காசுகளில் நிறைவடைந்திருந்தது. நிதிச் சந்தைகளில் இருந்து தொடர்ந்து அந்நிய முதலீடுகள் வெளியேறி வருவதே ரூபாய் மதிப்பு சரிவதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இந்தியப் பங்குச் சந்தைகளும் இறக்கத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
காலை 10 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 358 புள்ளிகள் சரிந்து 52,803 புள்ளிகளிலும், தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 104 புள்ளிகள் இறங்கி 15,727 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 116 டாலரில் வர்த்தகமாகியது.