ஏப்.18-ல் ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் RTGS சேவை 14 மணி நேரம் நிறுத்தம்: ரிசர்வ் வங்கி

ஏப்.18-ல் ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் RTGS சேவை 14 மணி நேரம் நிறுத்தம்: ரிசர்வ் வங்கி
ஏப்.18-ல் ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் RTGS சேவை 14 மணி நேரம் நிறுத்தம்: ரிசர்வ் வங்கி
Published on

ஒரு வங்கியின் சேமிப்புக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கியின் சேமிப்புக் கணக்கிற்கு நிகழ் பொழுதில் உடனடியாக பணத்தை அனுப்பவும், பெறவும் செய்கின்ற வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது RTGS பரிமாற்றம். இதனை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று சுமார் 14 மணி நேரம் இந்த சேவை நிறுத்தப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தொழில்நுட்பத்தை மேம்படுத்துகின்ற காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

அதன்படி அன்றைய தினம் 00:00 மணி முதல் 14:00 மணி வரை சுமார் 14 மணி நேரம்  இந்த சேவை நிறுத்தப்பட்டிருக்கும். அதாவது நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 2 மணி வரை. இருப்பினும் NEFT சேவைக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இது குறித்து தெரிவித்து, அதற்கு உகந்த படி பரிமாற்றத்தை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com