பெட்ரோல், டீசல் விலை உயர்வு பாதிப்பிலிருந்து மக்களை காக்க அதன் மீதான வரிகள் குறைக்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் மைக்கேல் பத்ரா தெரிவித்துள்ளார்.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மைக்கேல் பத்ரா, பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்த வேண்டியுள்ளதால் விலைவாசி உயர்வதுடன் பொருளாதார வளர்ச்சியும் தடைபடும் எனத் தெரிவித்தார். இந்த நிலை ஏற்படுவதை தடுக்க பெட்ரோல், டீசல் மீதான வரிகளை அரசு குறைக்கலாம் என மைக்கேல் பத்ரா தெரிவித்தார். உக்ரைனில் ஏற்பட்டுள்ள போர் உலகளவில் மீண்டும் ஒரு பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் கவலை தெரிவித்தார்.