வங்கிகளுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்திற்கு பின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் முடிவால் வீடு, வாகனக்கடன் உள்ளிட்ட வங்கிக் கடன்களின் வட்டி பழைய அளவிலேயே தொடர வாய்ப்புள்ளது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி 4% என்ற அளவிலேயே நீடிக்கும் எனவும், அதேபோல், ரிசர்வ் வங்கியில் வங்கிகள் செய்யும் டெபாசிட்டிற்கான வட்டியும் 3.35% என்ற முந்தைய அளவிலேயே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.