புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் அதிரடி உயர்வு- வாடகை வாகனத்தை சார்ந்த தொழிலாளிகள் கடும் அவதி

புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் அதிரடி உயர்வு- வாடகை வாகனத்தை சார்ந்த தொழிலாளிகள் கடும் அவதி

புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் அதிரடி உயர்வு- வாடகை வாகனத்தை சார்ந்த தொழிலாளிகள் கடும் அவதி
Published on

வாடகை வாகனங்களை புதுப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கான கட்டணங்கள் ஏப்ரல் 1 முதல் உயர்ந்துள்ளதால், வாடகை வாகனங்களை நம்பி தொழில் புரிவோர் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். கட்டண உயர்வால் வாடகை வாகனங்கள் குறிப்பாக ஆட்டோக்களில் கட்டணம் உயரும் நிலை உருவாகியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் மூலமாக புதிய கட்டணம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதன்படி 15 ஆண்டுகளை கடந்த ஆட்டோக்கள் வாகனத் தகுதி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் 625 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தவறினால் நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும்.

ஆட்டோக்களை ஓட்ட பேட்ஜ் வாங்குவதற்கான கட்டணம் 1500 ல் இருந்து 2500 ஆக அதிகரித்துள்ளது. ஆட்டோக்களை இயக்குவதற்கான உரிமம் பெறுவதற்கான கட்டணம் 400 ரூபாயில் இருந்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

சென்னை நகரில் மட்டும் 70 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கி வரும் நிலையில், இந்தக் கட்டண உயர்வு வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்கிறார்கள் ஆட்டோ ஓட்டுநர்கள். அதேபோல் வாகனப் புகைச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் 300 ரூபாயிலிருந்து 10,500 ரூபாயாகவும், உரிமம் இல்லாமல் வாகனத்தை ஒட்டினால் அபராதம் 500 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com