ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ள இரு முக்கியமான நிறுவனங்களான ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்களின் ஐபிஓ இந்த ஆண்டில் வெளியாகும் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன. நடப்பு ஆண்டுக்குள் இதற்கான ஐபிஒ வெளியாகும் என்றும் இதற்கான அறிவிப்வை வர இருக்கும் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிவிப்பார் என தெரிகிறது.
இந்த பங்குகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்க பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்படும் எனத் தெரிகிறது. இரு நிறுவனங்களும் தலா ரூ.50000 கோடிக்கும் மேல் திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ரஷ்யா உக்ரைன் போர் சிக்கல் முடிவுக்கு வந்த பிறகு இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கும் என தெரிகிறது.
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.8 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ சந்தை மதிப்பு ரூ.7.5 லட்சம் கோடியாக இருக்கும் என தெரிகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட 13 நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. இந்த நிறுவனங்கள் வசம் 33 சதவீத பங்குகள் உள்ளன.