வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் ரெப்போ 4% ஆக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் ரெப்போ 4% ஆக தொடரும். ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாததால் வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதத்திலும் மாற்றமில்லை. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.3%ஆக தொடரும். இந்தியாவின் பொருளாதாரம் ஏப்ரல் - மே மாதங்கள் முதல் உயரத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மீண்டு எழத் தொடங்கிவிட்டது. அதிகரித்து வரும் கொரோனாவால் அடுத்தடுத்து பொதுமுடக்கங்கள் அறிவிக்க வேண்டியதாயிற்று” என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.