பத்து ரூபாய் நாணயங்கள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும், தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
புதிய வடிவமைப்புடன் 10 ரூபாய் நாணயங்கள் வெளிவந்திருக்கும் நிலையிலும், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களும் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
பத்து ரூபாய் நாணயங்கள் ரூபாய் குறியீட்டுடனும், ரூபாய் குறியீடு இல்லாமலும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவை சற்றே மாறுபட்டு தோன்றினாலும் இரண்டுமே செல்லுபடியாகக் கூடியவை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய மற்றும் பழைய 10 ரூபாய் நாணயங்கள் தடையோ, ரத்தோ செய்யப்படவில்லை என்றும், தேவையற்ற வதந்திகளை நம்பவோ, 10 ரூபாய் நாணயங்களை வாங்கத் தயங்கவோ கூடாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.