இணையதள வணிக நிறுவனங்கள், டெபிட், கிரெடிட் கார்டு வழங்கும் வங்கி மற்றும் நிறுவனங்கள், வாடிக்கையாளரின் பரிவர்த்தனையின்போது கார்டு விவரங்களை பதிவு செய்து அடுத்தடுத்த பரிவர்த்தனையின்போது தானாக பதிவிடும் முறையை கையாள்கின்றன. இது வாடிக்கையாளரின் பரிவர்த்தனையில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, வாடிக்கையாளரின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை பதிவு செய்வதைத் தடை செய்து ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டது.