டிக்கெட்டுகளை கேன்சல் செய்ததன் மூலம் ரயில்வேக்கு ரூ.9,000 கோடி வருவாய்..!

டிக்கெட்டுகளை கேன்சல் செய்ததன் மூலம் ரயில்வேக்கு ரூ.9,000 கோடி வருவாய்..!
டிக்கெட்டுகளை கேன்சல் செய்ததன் மூலம் ரயில்வேக்கு ரூ.9,000 கோடி வருவாய்..!
Published on

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்ததன் மூலம் இந்திய ரயில்வே ஒன்பதாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

இந்தியன் ரயில்வே 2017-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையில், முன்பதிவு செய்து டிக்கெட்டை ரத்து செய்தவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இருந்து டிக்கெட்டுகளை கேன்சல் செய்யாதவர்கள் ஆகியோரிடம் இருந்து கிட்டத்தட்ட 9000 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரை சேர்ந்த சுஜித் சுவாமி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு ரயில்வேதுறை இந்த பதிலை அளித்துள்ளது.

இதில் காத்திருப்போர் பட்டியலில் இருந்து டிக்கெட்டை கேன்சல் செய்யாதவர்களிடம் இருந்து 4335 கோடி ரூபாய் வருவாயும், டிக்கெட் உறுதிசெய்யப்பட்டு பின் அந்த டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டதன் மூலம் 4684 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இதில் அதிகப்படியான வருவாய் ஏசி 3-வது படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகளில் பயணம் செய்பவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கடந்த மூன்று வருடங்களில் 145 கோடி மக்கள் ஆன்லைனில் டிக்கெட்டை பதிவு செய்திருக்கிறார்கள் 74 கோடி மக்கள் நேரடியாக சென்று டிக்கெட்டை பதிவு செய்திருக்கிறார்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com