59 நிமிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு கடன் அளிக்கும் 'PSB Loans in 59 Minutes' திட்டத்தின் கீழ் வீடு, மற்றும் வாகன கடன்களை வழங்க பொதுத்துறை வங்கிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தில் தற்போது சிறு, குறு மற்றும் நடுத்த தொழில் நிறுவனங்கள் ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெற முடியும். இந்தக் கடனை 5 கோடி ரூபாய் வரை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கார்ப்ரேஷன் வங்கிகள் தெரிவித்துள்ளன. மேலும், இந்தத் திட்டத்தில் வீடு, வாகனங்கள் வாங்க கடன் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுத்துறை வங்கிகள் தெரிவித்துள்ளன.
59 நிமிடங்களில் கடன் திட்டம் அறிமுகம் ஆனதிலிருந்து இதுவரை 50 ஆயிரத்து 706 விண்ணப்பங்களுக்கு கொள்கை ரீதியாக அனுமதியளிக்கப்பட்டு, மார்ச் இறுதி வரை 27 ஆயிரத்து 893 விண்ணப்பங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்ட 4 மாதங்களில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது