புரட்டாசி மாதம் மற்றும் ஆயுதபூஜை காரணமாக, நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழியின் விலை சரிந்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களில் கறிக்கோழியின் விலை கிலோவுக்கு 27 ரூபாய் குறைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ கறிக்கோழி 94 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைந்ததால், கறிக்கோழி விற்பனை சரிந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கறிக்கோழிகள் தேக்கமடைந்துள்ளதாகவும், இதனால் விலை குறைத்துள்ளதாகவும் கூறுகின்றனர். சில்லறை விற்பனையில் கோழி இறைச்சி ஒரு கிலோ 150ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.