பெட்ரோலின் விலை கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் இன்று வரை 7 ரூபாய் 53 காசு அதிகரித்துள்ளது.
ஜூன் 16ஆம் தேதி, முதல் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை ஒன்றாம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 65 ரூபாய் 46 காசாக இருந்தது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி 2 ரூபாய் 25 காசு உயர்ந்து 67 ரூபாய் 71 காசாக விற்கப்பட்டது. அடுத்து வந்த நாட்களிலும் பெட்ரோல் விலை கணிசமாக அதிகரித்துக் கொண்டே வந்தது.
செப்டம்பர் ஒன்றாம் தேதி 71 ரூபாய் 78 காசாக இருந்த பெட்ரோலின் விலை செப்டம்பர் 20ஆம் தேதி உச்ச விலையாக 73 ரூபாய் 10 காசுக்கு விற்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 4 நாட்களில் பெட்ரோல் விலை 11 காசு குறைந்து இன்று 72 ரூபாய் 99க்கு விற்கப்படுகிறது. கடந்த இரண்டரை மாதங்களில் பெட்ரோலின் விலை 7 ரூபாய் 53 காசு அதிகரித்திருப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.