பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் இன்று உயர்ந்திருக்கிறது. 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாடு முழுவதும் அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது. நேற்று வரை பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்ந்திருந்த நிலையில், இன்று இரண்டு எரிபொருட்களின் விலையும் லிட்டருக்கு தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 107 ரூபாய் 45 காசுகளுக்கும் டீசல் ஒரு லிட்டர் 97 ரூபாய் 52 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.
இதன்மூலம், கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு லிட்டருக்கு 6 ரூபாயை கடந்துள்ளது. உக்ரைன் போர் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏமன் நாட்டின் எண்ணெய் கிணறுகள் சேதம் ஆகிய காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. எனினும், கடந்த சில நாட்களாக ரஷ்யா -உக்ரைன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.