சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு வாரத்தில் 7 வது முறையாக இன்றும் அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் ஒரு லிட்டர் 76 காசுகள் உயர்ந்து ரூ. 105.94 - க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 67 காசுகள் அதிகரித்து 96 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 8 நாட்களில், 7 முறையாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.4.54 -க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.4.57-க்கும் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.50 உயர்ந்திருக்கும் நிலையில், பெட்ரோல் டீசல் இதேபோல உயர்ந்துவந்தால் வரும் நாள்களில் பிற அடிப்படை அத்தியாவசிய பொருட்களும் அதிகரிக்கலாம் என கணிக்கப்படுகிறது.
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததாலேயே பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க காரணமாக கூறப்படும் நிலையில், பிரெண்ட் கச்சா 8 நாட்களில் சுமார் 13 டாலர் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.