நள்ளிரவு முதல் விற்பனைக்கு வரும் ‘ஒன்ப்ளஸ் நோர்ட்’ : விலை, சிறப்பம்சங்கள்

நள்ளிரவு முதல் விற்பனைக்கு வரும் ‘ஒன்ப்ளஸ் நோர்ட்’ : விலை, சிறப்பம்சங்கள்
நள்ளிரவு முதல் விற்பனைக்கு வரும் ‘ஒன்ப்ளஸ் நோர்ட்’ : விலை, சிறப்பம்சங்கள்
Published on

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான நோர்ட் இன்று நள்ளிரவு முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட விலையுயர்ந்த போன்களின் பட்டியலில் ஒன்றாக கருதப்படும் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான நோர்ட் மாடல் இன்று நள்ளிரவுமுதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

விலை :

8 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் என இரண்டு ரகங்களில் இன்று இந்த போன் விற்பனைக்கு வருகிறது. இதில் 8 ஜிபி மாடலின் விலை ரூ.27,999 எனவும், 12 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.29,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர செப்டம்பர் மாத தொடக்கத்தில் இதேபோனின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் என்ற மாடல் வெளிவருகிறது. அதன் விலை ரூ.24,999 ஆகும்.

சிறப்பம்சங்கள் :

டிஸ்ப்ளே : 6.44 இன்ச் ஃபுல் ஹெச்டி

பிராசஸர் : குவால்கம் ஸ்நாப்ட்ராகன் 765ஜி

ரேம் : 12 ஜிபி

ஸ்டோரேஜ் : 256 ஜிபி (மைக்ரோ சிப் பொருத்த முடியாது)

பேட்டரி : 4,115 எம்ஏஹெச் திறன்

நெட்வொர்க் : 5ஜி, 4ஜி எல்டிஇ

புளூடூத் : 5.1

கேமரா பிரைமெரி : 48 எம்பி (மெகா பிக்ஸல்) + 8 எம்பி + 2 எம்பி + 5 எம்பி

செல்ஃபி கேமரா : 32 எம்பி + 8 எம்பி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com