ஜுன் 22-ஆம் தேதி அறிமுகமாக உள்ள ஒன் பிளஸ் 5 ஸ்மாரட்ஃபோனிற்கு தற்போது வரை 5.25 லட்சம் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
சீனாவின் முன்னணி ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஒன் பிளஸ், தனது புதிய ரக ஸ்மார்ட்ஃபோனான ஒன்பிளஸ் 5 -யை ஜுன் 22-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதாவது, புதிய ஒன்பிளஸ் 5 முன்பதிவுகள் சீனாவின் JD.com தளத்தில் துவங்கப்பட்டதை தொடர்ந்து, சீனாவில் இதுவரை 5.25 லட்சம் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவிற்கு எந்தவித கட்டணமும் அறிவிக்கப்படவில்லை.
இந்த ஸ்மார்ட்போனில், 3300mAh பேட்டரி, அதிக திறனுள்ள இரட்டை காமிரா, 5.5 இன்ச் டிஸ்பிளே, குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராசசர் ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன. இதன் விலை ரூபாய் 32,999லிருந்து 40 ஆயிரம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.