48 மணி நேரம் தாங்கும் பேட்டரியுடன் கூடிய நோக்கியா 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நோக்கியா 2 ஸ்மார்போன் நவம்பர் மாத மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.
பின்லாந்து நாட்டைச் சார்ந்த நோக்கியா நிறுவனத்தின் போன்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டன. நோக்கியா நிறுவனம் மிக குறைந்த விலையில் மொபைல்களை அறிமுகம் செய்து சாதாரண மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. குறிப்பாக நோக்கியாவின் 1100 மாடலில் பேட்டரி நெடுநேரத்திற்கு சக்தி குறையாமல் இருந்தது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. பின்னர் பல்வேறு மொபைல் போன்கள் போட்டிக்கு வந்ததால் நோக்கியா மொபைல்கள் அதிக அளவு விற்பனையில் இல்லாமல் இருந்தது. தற்போது, எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா உடன் இணைந்து ஸ்மாட் போன்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. சர்வதேச அளவில் 99 யூரோவிற்கு விற்பனை செய்யப்படுவதால் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.7500 என நிர்ணம் செய்யப்படும் என்று தெரிகிறது. IP 52 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் காப்பர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
நோக்கியா 2 சிறப்பம்சங்கள்: