ஒலிம்பிக், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப் என பல்வேறு போட்டிகளில் குத்துச்சண்டை விளையாட்டில் பதக்கங்களை குவித்தவர் மேரி கோம். இந்தியாவில் வளர்ந்து வரும் பல விளையாட்டு வீரர்களுக்கு அவர் ஒரு வாழும் இன்ஸ்பிரேஷன்.
இந்நிலையில் அவரது பிரத்யேக NFT கலெக்ஷனை வெளியிட்டுள்ளது nOFTEN என்ற நிறுவனம். உலகம் முழுவதும் உள்ள கலைஞர்கள் மற்றும் பிரபலங்களின் NFT-களை மின்ட் செய்ய உதவும் மார்க்கெட் பிளஸ் தான் nOFTEN. இதில் தற்போது மேரி கோமின் கலெக்ஷன்கள் புதிதாக இணைந்துள்ளது. இதில் மேரி கோமின் வாழ்கையை அரிய தொகுப்புகளாக வெளியிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
NFT?
நம்மிடம் உள்ள போட்டோ, ஓவியங்கள் என பல்வேறு விதமான கலை படைப்புகள் அனைத்தையும் டிஜிட்டல் வடிவில் தனித்துவமாக பதிவு செய்வது தான் NFT. கிட்டத்தட்ட இது ஒரு காப்புரிமை போல. உதாரணமாக மோனோலிசா படத்தை ஓவியர் டாவின்சி வரைந்தார் என்பதை உலகமே அறியும். இருந்தாலும் அந்த படம் பல்வேறு இடங்களில் உள்ள சுவர்களில் அழகுக்காக தொங்கவிடப்பட்டிருக்கும். அது பலரது கைகளில் இருந்தாலும் அந்த படத்தை வரைந்தவர் டாவின்சி. அது போல தான் NFT-யும். ஆனால் இது அப்படியே டிஜிட்டல் வடிவில் இருக்கும் அவ்வளவு தான். அதை படைத்தவர் தனக்கு தேவைப்படும் நேரத்தில் அடுத்தவர்களுக்கு விற்பனை செய்யலாம். அப்படி செய்து விட்டால் அந்த படைப்பின் உரிமை அதை வாங்கியவருக்கு சென்றுவிடும்.