புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் திட்டமிட்டமில்லை என்றும், புதிய 200 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறியுள்ளார்.
ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை மைசூரு பிரின்டிங் பிரஸ் நிறுத்தி உள்ளதாகவும் அதற்கு பதிலாக ரூ.200 நோட்டுக்கள் அச்சிடுவதில் தீவிரம் காட்டப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. ரூ.200 நோட்டுக்கள் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற இருப்பதாகவும், அதனால் அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் திட்டமிட்டமில்லை என்றும், புதிய 200 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.