கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கூடுதலாக ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா மற்றும் பொதுமுடக்கத்தால் தொழில்கள் முடங்கி நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசு இந்த நிலைமையை சீர் செய்ய கூடுதலாக ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம் என பொருளாதார வல்லுனர்கள் யோசனை தெரிவித்தனர்.
இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுமுடக்க தளர்வுகள் காரணமாக பொருளாதாரம் மீண்டு வருவதாகவும், கூடுதலாக ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்றும் கூறியுள்ளார்.