சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியில் அடுத்த 3 மாதங்களுக்கு மாற்றமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று தொடங்கும் நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியில் மாற்றமில்லை என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட சேமிப்புகளுக்கான வட்டி 7.1 சதவிகிதமாகவும், செல்வமகள் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி 7.6 சதவிகிதமாகவும் நீடிக்கும். இன்று தொடங்கும் காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி குறைக்கப்படும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தாலும் வட்டிக்குறைப்பு எதுவும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.