என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனை நேற்று தொடங்கிய நிலையில் அப்பங்குகளை வாங்க தனியார் துறையினர் பெரும் ஆர்வம் காட்டினர்.
பங்கு விற்பனையின் முதல் நாளிலேயே ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன. என்எல்சி நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பது மூலம் குறைந்தது 800 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கிடையில் என்எல்சி பங்கு விற்பனை நடவடிக்கையை கைவிடுமாறு மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது