இந்திய பங்கு சந்தை மதிப்புகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இன்றும் அபார ஏற்றம் பெற்றன.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்கு சந்தை மதிப்பீடான சென்செக்ஸ் 1,075.41 புள்ளிகள் ஏற்றமடைந்து 39,090.03 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. தேசிய பங்கு சந்தை மதிப்பீட்டு குறியீடான நிஃப்டி 329.20 புள்ளிகள் உயர்ந்து 11,603.40 புள்ளிகளில் முடிவடைந்தது. இன்றைய வர்த்தக நாளில் பீபிசிஎல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஈசேர் மோட்டார்ஸ், ஐஓசி மற்றும் எல் அண்ட் டி ஆகிய நிறுவனங்கள் அதிக ஏற்றத்தை கண்டன.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை பெரும் நிறுவனங்களுக்கான வரி விகிதத்தை 22 சதவிகிதமாகக் குறைத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதைத்தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 600 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வர்த்தகமாகின.