பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் பைபர் இன்டர்நெட் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில், குறைந்த கட்டணத்தில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
தனியாருக்கு இணையான சேவையை வழங்கிவரும் பிஎஸ்என்எல், தற்போது பைபர் இன்டர்நெட் இணைப்பை வாடிக்கையாளர்களிடம் அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. அதன்படி, குறைந்த கட்டணத்தில் அதிக பலன்கள் தரக்கூடிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்துவருகிறது.
பழைய தொலைபேசி எண்ணிலேயே பைபர் இன்டர்நெட் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது மாதந்தோறும் 449, 999, 1,499 ஆகிய கட்டணங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகளுடன் புதிய சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பாரத் பைபர் பிராட்பேண்ட் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த திட்டம், அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்குவருகிறது என பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.