ரிலையன்ஸ் தலைவரான முகேஷ் அம்பானி, எல்விஎம்ஹெச் தலைவரான பெர்னார்டு அர்னால்டை முந்தி உலகின் நான்காவது பணக்காரராக மாறியுள்ளார். அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 326 மில்லியன் டாலர் அதிகரித்து 80.2 பில்லியன் டாலராக உள்ளது, அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 6.04 லட்சம் கோடிகள்.
அர்னால்ட்டின் நிகர மதிப்பு 1.24 பில்லியன் டாலர் குறைந்து 80.2 பில்லியன் டாலராக (ரூ. 60.01 லட்சம் கோடி) குறைந்ததால் அவர் ஐந்தாவது இடத்தில் உள்ளார். பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் பில் கேட்ஸுக்குப் பிறகு உலகின் நான்காவது பணக்காரராக உள்ளார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டு தரவுகளின்படி, ரிலையன்ஸ் தலைவர் அம்பானி ஜனவரி மாதம் முதல் இந்த குறியீட்டில் முதல் பத்து இடங்களுக்கு உயர்ந்தார். தற்போது உலகின் முதல் 5 பணக்காரர்களின் பட்டியலில் நுழைவதன் மூலம் அம்பானி முக்கியமான சக்தியாக மாறியுள்ளார். பல தசாப்தங்களாக, உலகின் ஐந்து பணக்காரர்கள் அமெரிக்கர்கள், ஒன்று அல்லது இரண்டு ஐரோப்பியர்கள் மற்றும் எப்போதாவது ஒரு மெக்சிகன் ஆதிக்கம் செலுத்தும் வகையில்தான் இப்பட்டியல் இருந்தது. ஆனால் தற்போது அம்பானி முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேறியுள்ள முதல் பணக்கார இந்தியர் மட்டுமல்ல, முதல் ஆசிய பணக்காரரும் இவர்தான்.